தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

share on:
Classic

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 2,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா அமர்வு உத்தரவிட்டுள்ளது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 7-ம் தேதி விசாரணை தொடங்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.

பிப்ரவரி 7-ம் தேதி முதல் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை 67 சதவீதம் பொய்த்து விட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதாக தமிழக அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

Loading...

cauvery