தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

share on:
Classic

தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடரைக் கூட்டி , தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி நிலை நீடிப்பதாக தெரிவித்தார். இதனால்,தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இன்றி தவித்து வருவதாகவும் கூறினார்.

குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை, சம்பா ஆகிய சாகுபடிகளுக்கும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் மொத்தமாகவே படுத்து விட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடரைக் கூட்டி, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Loading...

surya