தமிழகம், புதுவையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 4 தொகுதி தேர்தல்களிலும் திமுக- காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதனால், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளதாகவும் வசந்தகுமார் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 4 தொகுதிகளுக்கான தேர்தல்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

surya