தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

share on:
Classic

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அன்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மூன்று மாதங்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக யாரும் நியமிக்கப்படவில்லை.

தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார் என்ற கேள்வி கடந்த சில தினங்களாக எழுப்பப்பட்டு வந்தது. தற்போது இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு. திருநாவுக்கரசர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Loading...

vaitheeswaran