தமிழக மீனவர்கள் 10 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

share on:
Classic

இன்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி இராமலிங்கம் சபேசன் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நெடுந்தீவு அருகே சட்டவிரோதமான முறையில் நுழைந்து இரண்டு விசைப்படகுகளை முற்றுகையிட்டதுடன், அதில் மீன்பிடித்த 10 பேரையும் கைது செய்தனர்.

கைதான அனைவரும் தமிழ்நாடு ஜெகதாப்பட்டிணம் பகுதியினை சேர்ந்தவர்கள் என்பதுடன் இதில் இருந்த 15 வயது சிறுவன், அரசு சான்றிதழ் பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் சேர்க்குமாறும் ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு கடந்த வருடம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 32 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 19ஆம் தேதி வரை நீடித்து, ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் 6 படகுகளுடன் வெவ்வேறு தினங்களில் கைதான 32 மீனவர்களின் காவலையும் மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Loading...

surya