தமிழில் சன்னி லியோன் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

share on:
சன்னி லியோன்
Classic

பாலிவுட் முன்னனி நடிகையும், இளைஞர்களின் கனவு கன்னியுமான சன்னி லியோன் தமிழில் நடிக்கும் சரித்திர படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது

வி. சி. வடிவுடையன் இயக்கும் சரித்திர பின்னணி படத்தில் பாலிவுட் முன்னனி நடிகை சன்னி லியோன் நடிக்கிறார் இத்திரைப்படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்க்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கிறார். 

சரித்திர பின்னணி படம் என்பதால் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழுவின்ர் வெளியிட்டுள்ளனர்

லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் தான் இந்த வரலாற்றுப் படத்திற்கும் இசையமைப்பதாக  தெரிவித்துள்ளனர். 

படத்தில் பழங்கால இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும் என்றும் படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் வெளிநாட்டில் நடைப்பெறும் என்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் தெரிவித்துள்ளார். மேலும்  பாஸ்கர் தி ராஸ்கல், யங் மங் சங், கர்ஜனை, சார்லி சாப்ளின் 2 என பல்வேறு திரைப்படங்களுக்கு அம்ரிஷ் இசையமைத்து வருகிறார். 

News Counter: 
120
Loading...

vijay