தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது

share on:
Classic

தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விருதுகளை வழங்கினார்.

இந்த விழாவில், திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும் மேலும், அண்ணா விருது கவிஞர் கூரம் மு.துரைக்கும், காமராஜர் விருது டி. நீலகண்டனுக்கும் பாரதியார் விருது முனைவர் ச. கணபதிராமனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், திரு.வி.க. விருது போராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி உருக்கமாக விஷயங்களை நினைவு கூர்ந்தார். மேலும் தமிழர்கள் குறித்தும் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்தும் பேசினார்.

Loading...

surya