தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகர் விமல்

share on:
Classic

பூபதி பாண்டியன் இயக்கத்தில் மன்னர் வகையறா என்ற புதிய படத்தில் விமல் நடித்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சில குறிப்பிட்ட காரணங்களால் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.

இதையடுத்து, இப்படத்தை தயாரிக்க எந்தவொரு தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இதனால், இந்த படத்தை தானே தயாரிக்கவுள்ளதாக விமல் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் பிரச்சனை காரணமாக இந்த படத்திற்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகர்-நடிகைகள் நீக்கப்பட்டு ( நாயகி ஆனந்தி உட்பட) புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இப்படத்தில் நகைச்சுவை ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் என்பதால் ரோபோ ஷங்கர் மற்றும் யோகி பாபு ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் தொடரப்பட்டுள்ளன.

பசங்க மற்றும் களவாணி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய விமல் இப்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளது அவருக்கு எந்தவகையில் கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Loading...

ganesh