தாய்லாந்தில் கனமழை: பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு

share on:
Classic

தாய்லாந்தில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளள.

இதனால், சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 12லிருந்து தற்போது 19ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மழை வெள்ளத்தால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என தாய்லாந்து வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Loading...

jagadish