திமுகவை மீறி உன்னால் ஜெயிக்க முடியுமா? விஷாலுக்கு நடிகர் ராதாரவி சவால்

share on:
Classic

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போன்ற பெரிய கட்சிகளை மீறி  விஷால் வெற்றி பெற முடியுமா என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இயக்குனர் சேரன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு நடிகர் ராதாரவி, எஸ்.வி.சேகர், நடிகை ராதிகா உள்ளிட்டோர் இயக்குனர் சேரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவி, விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தவறான ஒன்று. சேரனின் நியாயமான போராட்டத்திற்கு நான் ஆதரவு தருகிறேன். 

ஆர்.கே.நகரில் உள்ள மக்கள் அனைவரும் விஷாலை சந்தித்து கோரிக்கை விடுப்பது போல் அவர் பேசி வருகிறார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ள ஆதரவு அவருக்கு இல்லை. தேர்தலிருந்து வாபஸ் பெற இன்னும் கூட நாள் உள்ளது. அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்று தயாரிப்பாளர் சங்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

News Counter: 
125
Loading...

vijay