திருப்பரங்குன்றம் : அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி

share on:
Classic

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 42 ஆயிரத்து 714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் பதிவான 2 லட்சத்து 3 ஆயிரத்து 100 வாக்குகளும் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

21வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 1 லட்சத்து 13 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்று 42 ஆயிரத்து 714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் சரவணன் 70 ஆயிரத்து 362 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் 6 ஆயிரத்து 930 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் தனபாண்டியன் 4 ஆயிரத்து 105 வாக்குகள் பெற்று 4ம் இடத்திலும் உள்ளார்.

Loading...

vaitheeswaran