திரைத்துறையினருக்கு விரைவில் விருது: ஜெயலலிதா அறிவிப்பு

share on:
Video

திரைப்படத் துறையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளாக காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கம் வி நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், பல காரணங்களால் நிறுத்தப்பட்ட திரைத்துறையினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெறும் என்றார்.

சின்னத்திரை நடிகர்களுக்கு அதிமுக அரசுதான் சிறப்பு விருதுகளை அறிவித்தது என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். இதே போன்று சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மணிமண்டபம் அமைக்கப்பட்ட பின்னர், அங்கு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிவாஜியின் சிலையை மாற்றி அமைப்பது அதிமுக அரசின் விருப்பமல்ல என்று குறிப்பிட்ட அவர், சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Loading...

suresh