close
முகப்புதீயணைப்பு நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 

தீயணைப்பு நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 

November 11, 2017 113Views
தீயணைப்பு நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 

நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

திருமருகலில் உள்ள பழைய கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக கட்டடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதன் காரணமாக தீயணைப்பு நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தீயணைப்பு வீரர்கள் உயிர் தப்பினர். மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.