துருவங்கள் பதினாறு ட்ரெய்லரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்

share on:
Classic

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ரஹ்மான். தமிழில் இவர் நடித்த சங்கமம் என்ற படம் பரவலான கவனத்தைப் பெற்றது. தற்போது துருவங்கள் பதினாறு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் நரேன் என்பவர் தயாரித்தும் இயக்கியும் உள்ளார். 21 வயதே ஆன இவர், சில குறும்படங்கள் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் என்பதால், படத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இதை பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் மாலை 4 மணி அளவில் வெளியிடுகிறார்.

Loading...

vaitheeswaran