தூத்துக்குடி : பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய வெளிநாட்டினர்

share on:
Classic

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டவர் வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

இந்திய கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், மொழிகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.

ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சென்னையில் இருந்து அவர்கள் ஆட்டோக்கள் மூலம் தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் ஆட்டோக்களை பல வண்ணங்களால் அலங்கரித்து இருந்தனர்.

தூத்துக்குடியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்துக்கு சென்றனர்.

அங்குள்ள ஒரு தோட்டத்தில், பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இதற்காக வெளிநாட்டினர், தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி பொங்கலிட்டனர்.

ஆண்கள் வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தனர். பெண்கள் சேலை கட்டி வந்தனர். அந்த பகுதியில் கரும்பு, வாழையால் தோரணங்கள் அமைத்து இருந்தனர்.

மஞ்சள் குலை, பழம், பனங்கிழங்கு உள்ளிட்டவற்றை படைத்தும் வழிபட்டனர். பொங்கல் பொங்கும் போது வெளிநாட்டினர் பொங்கலோ பொங்கலோ என குழவையிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

இந்த பொங்கல் விழா மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும், இதனை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் பொங்கல் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

Loading...

vaitheeswaran