தேசிய கீதம் பாடும் போது செல்ஃபி

share on:
Video

புதுச்சேரியில் முதல்வர் கலந்துகொண்ட பள்ளி நிகழ்ச்சியில் தேசியகீதம் பாடப்பட்டபோது, முதல்வர் அருகில் இருந்த கட்சிப்பிரமுகர் செல்ஃபி எடுத்தார்.

புதுச்சேரி அரசு திருவள்ளுவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதின விழாவையொட்டி, தேசிய கீதத்தை ஒருங்கிணைத்து பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அனைவரும் அமைதியாக எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர்.

அப்போது, தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும்போதே, முதல்வருக்கு அருகில் இருந்தவர் தன் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுத்தவர் பெயர் அப்துல் ரஹ்மான், இவர் உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். தேசிய கீதம் பாடப்படும்போது, அதற்கு மரியாதையளிக்கும் விதமாக எல்லா வேலையையும் நிறுத்திவிட்டு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது தான் வழக்கம்.

இந்நிலையில் முதலமைச்சருக்கு அருகில் இருப்பவரே தேசிய கீதத்தை அவமதித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜீவ், புதுச்சேரி

Loading...

vaitheeswaran