நடிகர் ராதாரவி தொடர்ந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

share on:
Classic

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் வரும் 19ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த  2015ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. நடிகர் சங்கத்தை நிர்வகித்த முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் முடிவெடுக்கப்படும் வரை ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராதாரவி நீக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் செயலாளர் விஷாலுக்கு எதிராக ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கம் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்துவிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மூலம் நீதிமன்ற அவமதிப்பு தெளிவாவதாக குறிப்பிட்டார். வரும் 19ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு  முன்னதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

News Point One: 
நடிகர் ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது
News Point Two: 
ராதாரவி நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
News Point Three: 
விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவு
News Counter: 
130
Loading...

vijay