நடிகர் விஜயின் தளபதி 60 படத் தலைப்பு சர்ச்சை : படக்குழுவினர் விளக்கம்

share on:
Classic

நடிகர் விஜயின் தளபதி 60 படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று பெயரிடவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பி.வெங்கட்ராம்ரெட்டி வழங்கும் விஜயா புரொடக்ஷன்ஸ், பி.ரெட்டி தயாரிப்பில் இளைய தளபதி விஜயின் தளபதி 60வது படத்திற்கு 'எங்கள் வீட்டுப் பிள்ளை' என்று பெயர்சூட்டப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் வெளியாவதாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெயருக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள படக்குழு, இது முற்றிலும் தவறான கருத்து என்று கூறியுள்ளது. மேலும படத்திற்கான தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், படத்தின் தலைப்பு குறித்த தகவல் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Loading...

surya