நடிகை விஜயசாந்திக்கு சொந்தமான நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள உயர் நீதிமன்றம் தடை

share on:
Classic

நடிகை விஜயசாந்திக்கு சொந்தமான நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு – பூந்தமல்லி நெடுஞ்சாலையில்  நடிகை விஜயசாந்திக்கு சொந்தமான இடத்தை   அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா, பாலாஜி,நடராஜன், புகழேந்தி மற்றும் கணேஷ்  ஆகியோர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்த இடத்தில் கடைகள் கட்டியுள்ளதாகவும்,  கட்டுமானங்களுக்கு  தடை விதிக்க கோரி   விஜயசாந்தி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 

இவ்வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், 
நடிகை விஜயசாந்திக்கு சொந்தமான இடத்தில்  சட்டவிரோதமாக கட்டுமானம் கட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

News Counter: 
136
Loading...

sankaravadivu