நவம்பர் 18 வரை சுங்கச்சாவடிகளை கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம்

share on:
Classic

சுங்கச் சாவடிகளை கட்டணம் இல்லாமல் பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

500 மற்றும் 1000ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்ததையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடிகளை பயன்படுத்துவோர் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

எனவே மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக, நவம்பர் 11ம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்தது.

எனினும் நிலைமை சீரடையாததால் நவம்பர் 14ம் தேதி வரை சுங்கச்சாவடிகளை இலவசமாக பயன்படுத்த மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்தது. இந்நிலையில் இன்று 3வது முறையாக நவம்பர் 18ம் தேதி வரை சுங்கச்சாவடிகளை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Loading...

surya