நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா

share on:
Classic

ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றன.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் தொடர்ச்சியான அமளியும், ஒத்திவைப்புகளும் மட்டுமே நடைபெற்று வருகிறது.

ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தங்கள் எதிர்ப்பின் ஒருபகுதியாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த போராட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

Loading...

vaitheeswaran