நானா குட்டிப்பையன்?... ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைத்த பண்ட்

share on:
Classic

சிட்னி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் 3 பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பண்ட் இந்தளவு 'ஸ்டாண்டிங் பேட்ஸ்மேன்' என்பதை சிறிதும் அறிந்திடாத ஆஸ்திரேலிய பவுலர்கள் இன்று திகைத்துப்போய் நின்றதை நம்மால் பார்க்க முடிந்தது. இதற்குக் காரணம், 'குட்டிப்பையன்' என முந்தைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களால் பண்ட் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால், 21 வயதாகும் அந்த குட்டிப்பையனின் இன்றைய குதூகலமான ருத்ரதாண்டவம் ஆஸீக்களை அதிர வைத்துவிட்டது. 

1* ரிஷாப் பண்ட் இதுவரை 9 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இதில், கடந்தாண்டு ஓவலில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 114 ரன்கள் குவித்து தன்னுடைய முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவிலும் தற்போது சதத்தை பதிவு செய்துள்ள பாண்ட், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்துள்ள 2-வது விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜெஃப்ரீ டூஜன் (1984-ஆம் ஆண்டு) முதலிடத்தில் உள்ளார். 

2* ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதம் விளாசியுள்ள முதலாவது இந்திய விக்கெட் கீப்பர் பண்ட் தான். 

3* நடப்பு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் பண்ட் வசம் சென்றுள்ளது. இவர், கேப்டன் கோலியை (282 ரன்கள்) பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை கைப்பற்றியுள்ளார். முதலிடத்தில் புஜாரா (521 ரன்கள்) நீடிக்கிறார். 

News Counter: 
100
Loading...

mayakumar