நாளை நள்ளிரவு வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது

share on:
Classic

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், நாளை நள்ளிரவு வரை, சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு தொடங்கி, நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில், 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடந்தன.

பல இடங்கில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே, ஆங்காங்கே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக, உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கவனத்திற்கு, சில மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, நாளை நள்ளிரவு வரை, சுங்கவரி வசூல் செய்வது நிறுத்திவைக்கப்படுவதாக, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். வாகன ஓட்டுநர்களின் வசதிக்காக, இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Loading...

vaitheeswaran