நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்: ரிசர்வ் வங்கி

share on:
Classic

அனைத்து வங்கிகளிலும் நாளை முதல், புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, கடந்த 8ஆம் தேதியன்று, மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், வங்கிகளில் தற்போது பொது மக்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றை எளிதாக மாற்ற இயலாமல், பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் தடையின்றி கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி கூறுகையில், புதிதாக அச்சடிக்கப்பட்ட 50 லட்சம் எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள், சனிக்கிழமைதான் ரிசர்வ் வங்கியை வந்தடைந்தது என்றும், அவற்றை நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மராட்டிய மாநிலம் நாசிக் நகரில், வருகிற மார்ச் மாதத்திற்குள் 40 கோடி எண்ணிக்கையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Loading...

surya