close
முகப்புநிலப்பிரச்சினையால் 11 பேர் படுகாயம் 

நிலப்பிரச்சினையால் 11 பேர் படுகாயம் 

November 11, 2017 124Views
நிலப்பிரச்சினையால் 11 பேர் படுகாயம் 

ஓசூர் அருகே நிலப்பிரச்சினையால் ஏற்பட்ட சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனியராசப்பா, அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைத்து குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே இடத்தில் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 

இதை கிராமத்தை சேர்ந்த சிலர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தையடுத்து, அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் வீட்டை இடித்தனர். 

இதுதொடர்பாக முனியராசப்பா குடும்பத்தினருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும், எதிர்தரப்பினர் 3 பேரும் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.