நீதிமன்ற மறுப்புக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு

share on:
Classic

அமெரிக்காவினுள் நுழையும் வெளிநாட்டினர் குடியேற்றம் குறித்த நிறைவேற்று ஆணையை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரான், ஈராக் உட்பட 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய 3 மாத காலம் அனுமதி மறுத்து, கடந்த 27ஆம் தேதி அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த உத்தரவை அமெரிக்க நீதிமன்றங்களும், தலைமை வழக்கறிஞர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததோடு,
ட்ரம்ப்பின் உத்தரவிற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற காவல் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், அமெரிக்க நீதிமன்றங்கள் அரசியல் சார்ந்தவைகளாக செயல்படுவதாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும், நீதிமன்றங்கள் பக்கசார்பாக செயல்படுவதாக கூற வேண்டுமென தான் எப்போதும் எண்ணியது இல்லை என்றும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை தெளிவாக படித்து சரி எது என்பதை நீதிபதிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், இந்த நாளை மிகவும் கவலைக்குரிய நாளாக கருதுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Loading...

surya