நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவிற்கு 3ம் இடம்

share on:
Classic

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டா 3ம் இடத்தை பிடித்துள்ளது.

நெல்லித்தோப்பு தொகுதியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் பதிவான 26 ஆயிரத்து 564 வாக்குகளில் முதலமைச்சர் நாராயணசாமி 18 ஆயிரத்து 709 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் 7 ஆயிரத்து 565 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

நோட்டா என்று சொல்லப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று 334 பேர் வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவி அண்ணாமலை 90 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை பின்னுக்குத் தள்ளி நோட்டா 3ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

cauvery