நெல்லை மாவட்டத்தில் சாரல் மழை

share on:
Classic

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், புளியரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர் வரத் தொடங்கியுள்ளது. மேலும மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.

குற்றாலம் மெயினருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும் பயணிகள் இல்லாததால் அருவியில் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

Loading...

jagadish