பக்ரைன் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வெட்டல் முதலிடம்

share on:
Classic

பக்ரைனில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் 3வது சுற்றில் ஃபெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார்.

பக்ரைன் ஓடுதளப்பாதையில் மொத்தம் 57 லேப்ஸ்களாக 308 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியில் 20 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பலப்பரீட்சை நடத்தினர். பந்தயத்தின் தொடக்கம் முதலே வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்ற காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. முடிவில் பந்தய தூரமான 308 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 33 நிமிடங்களில் கடந்து ஃபெராரி வண்டியை இயக்கிய ஜெர்மனி அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார். மெர்சிடஸ் அணியைச் சேர்ந்த லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெரி போட்டாஸ் ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்தனர். இதன் 4வது சுற்று பந்தயமானது வரும் 30ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெற உள்ளது.

Loading...

vijay