பட்ஜெட் தேதியை மாற்ற தேவையில்லை: மத்திய அரசு

share on:
Classic

அறிவிக்கப்பட்ட பட்ஜெட் தேதியை மாற்றத் தேவையில்லை என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், அறிவிக்கப்பட்ட பட்ஜெட் தேதியை மாற்றத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பட்ஜெட் தாக்கல் தேதியை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்திருந்தன.
இதனைத்தொடர்ந்து, தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து, தற்போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish