பணநாயத்திற்கு எதிராக போராட வேண்டும் : ராமதாஸ்

share on:
Classic

பணநாயகத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு பணம் வழங்கிய இரு கட்சிகளில் அதிக பணம் வழங்கிய கட்சி வெற்றி பெற்றிருப்பதாக கூறியுள்ளார்.

பண நாயகத்திற்கு எதிரான போராட்டத்தை பாமக நடத்தும் என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், பணநாயகத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணநாயகத்தை மீறி வாக்களித்த ஜனநாயகவாதிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Loading...

surya