பதவியேற்ற டிரம்ப் 3 முக்கிய ஆணைகளில் கையெழுத்து

share on:
Classic

தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்று முக்கிய நிறைவேற்று ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற முதல் நாளே ஒபாமா கேர் திட்டத்தில் சில சீரமைப்புகளைக் கொண்டு வரும் வகையில் ஃபெடரல் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை விரிவாக்கி தனது முதலாவது கையெழுத்தின் மூலம் நிறைவேற்று ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியது போலவே, டிரான்ஸ் பசுஃபிக் நாடுகளுடனான கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வெளிநாட்டு வேலையாட்கள் பணியமர்த்தப்படுவதை இடைநிறுத்துதல் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா அமைப்புகளின் நிதியை கட்டுப்படுத்தல் உட்பட மூன்று முக்கிய நிறைவேற்று ஆணைகளில் கையெழுத்திட்டார்.

கையெழுத்திட்டதன் பின்னர் பேசிய ட்ரம்ப், டிரான்ஸ் பசுஃபிக் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து நீண்ட நாட்கள் தான் பேசி வந்ததாகவும், இப்போது கையெழுத்தாகியுள்ள சில ஒப்பந்தங்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Loading...

jagadish