பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்

share on:
Classic

பிற கட்சிகளில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டை ஒம்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நடிகர் கஞ்சா கருப்பு, தமாகா இருந்து விலகிய திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். 

அப்போது பேசிய ஜெயலலிதா, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, தமாகா, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.கட்சிகள் இன்னும் பிற கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகி 91,308 பேர், இன்று முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் பொதுச்செயலாளர் என்ற முறையில் வரவேற்கிறேன் என்று கூறினார்.

Loading...

suresh