பவானி ஆற்றின் குறுக்கே 6 அணைகள் கட்ட கேரளா திட்டம்

share on:
Classic

பவானி ஆற்றின் குறுக்கே, தடுப்பணைகளை கட்டி, தமிழகத்துக்கு வரும் தண்ணீரை, கேரளாவுக்குள் திருப்பி விடும் முயற்சியில், கேரள அரசு மீண்டும் இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்திற்குள் வரும் பவானி ஆற்றுத் தண்ணீரையும்,முற்றிலுமாக தடுக்கும் வகையில், அட்டப்பாடி பள்ளத்தாக்கில், வரிசையாக ஆறு தடுப்பணைகளைக் கட்டுவதற்கு, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில், தாவளத்திலிருந்து கீரக்கடவுக்கு இடைப்பட்ட பகுதியில், தேக்குவட்டை மற்றும் மஞ்சகண்டி ஆகிய இரு இடங்களில், இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணி, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

பவானி ஆற்றில் தண்ணீர் வரத்தே இல்லாத நிலையில், சாலையோரத்தில் ஜல்லிகளைக் கொட்டி, ஆற்றுக்குள், ஜே.சி.பி., இயந்திர உதவியுடன், தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அடுத்தகட்டமாக, நான்கு இடங்களிலும் தடுப்பணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை, இந்த தடுப்பணைகள் அனைத்தும் கட்டப்பட்டால், தமிழகத்துக்கு வரும் பவானியின் நீர்வரத்து முற்றிலும் குறைந்து போய், பில்லுார் அணையும் சிறுவாணி போல வறண்டு விடும் அபாயம் அதிகமுள்ளது.

இதை தடுப்பதற்கு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Loading...

jagadish