பாக்தாத்: தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி

share on:
Classic

கிழக்கு பாக்தாத்தில் நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப்படைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்கே ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜமீலா மாவட்ட சந்தைப் பகுதிக்குள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று திடீரென நுழைந்தது. இதை சுதாரித்துக்கொண்டு காரை நோக்கி பாதுகாப்புப் படையினர் சுடத்தொடங்கினர்.

இதையடுத்து காரில் நிரப்பப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் பொதுமக்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். இதைத்தொடர்ந்து ஷியா பிரிவு முஸ்லீம்கள் செறிந்து வாழும் மற்றொரு மாவட்டமான பலாடியாட்டில் பொதுச்சந்தையினுள் நுழைந்த தற்கொலைப் படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த இரு சம்பவங்களிலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவ்விரு தாக்குதல்களில் ஒரு தாக்குதலுக்கு மட்டும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈராக்கில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மக்கள் தீவிரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish