பாடலாசிரியர் நா.முத்துகுமார் சென்னையில் காலமானார்

share on:
Classic

பிரபல திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் காலமான அவருக்கு 41 வயதாகும். கடந்த இரு தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்,தமிழ் திரை உலகில் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் என்ற பல துறைகளில் பங்காற்றியவர்.இவர், சுமார் 1500க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

தங்கமீன்கள் திரைப்படத்திற்காக எழுதிய ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சைவம் படத்தில் ‘அழகே அழகு’ என்ற பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran