பாதுகாப்பு படை வீரரின் வீடியோவால் அதிர்ச்சி

share on:
Classic

ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கான உணவு பொருட்கள் அதிகாரிகளால் விற்பனை செய்யப்படுவதால் கடும் பசியோடு வாடுவதாக எல்லை ராணுவத்தை சேர்ந்த வீரர் ஒருவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர் தேஜ் பகதூர் யாதவ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர் ராணுவ வீரர்களின் அவல நிலை குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் ஊழலின் நிலையை தோலுறித்துக் காட்டுகிறது.

பதக்கம் வென்றவர்கள், கிரிக்கெட் வீரர்கள் சன்மானம் அளித்து பாராட்டப்படும் மதிப்புமிகு இந்தியாவில் ராணுவ வீரர்கள் உண்ண உணவு கூட இன்றி பசியில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

அரசு உணவுக்காக ராணுவ வீரர்களுக்கு அளிக்கும் பொருட்களை அதிகாரிகள் விற்று காசாக்குவதாகவும், காலையில் ஒரு ரொட்டி டீ மற்றும் மதிய உணவுக்கு கொஞ்சம் பருப்பு மற்றும் வேகாத சப்பாத்தியும் வழங்கப்படுவதாகவும் 11 மணி தொடர் பணியில் ஈடுபடும் தங்களுக்கு இது போதுமானதா என்றும் தேஜ்பகதூர் வினவியுள்ளார்.

இந்த மனித உரிமை மீறல் குறித்து அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிடாத வரை தனக்கு நிம்மதியான உறக்கம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். முகநூலில் தேஜ்பகதூர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

jagadish