பாலமுரளி கிருஷ்ணாவுக்கு கருணாநிதி இரங்கல்

share on:
Classic

பழம்பெரும் கர்நாடக இசைமேதை, பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் உடல்நலக்குறைவால் பாலமுரளி கிருஷ்ணா மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருத்தமடைந்ததாக தெரிவித்தார்.

திரை உலகத்திலும் இசைத் துறையில் பங்கேற்று வெற்றிக் கொடி ஏற்றிய அவர், திமுக ஆட்சியில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக தான் இயற்றிய இசைப் பாடலின் சில வரிகளை அவர் பாடியது இன்னும் தனது செவிகளில் தவழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் "பத்மவிபூஷன்" விருது, சென்னை மியூசிக் அகாடமியின் "சங்கீத கலாநிதி" விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ளார்.

அவருடைய மறைவுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குறிப்பாக இசை உலகத்தினருக்கும் தன் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Loading...

vaitheeswaran