பாலமுரளி கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

share on:
Classic

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைப்படப் பின்னணிப் பாடகரும் கர்நாக இசை விற்பன்னருமான பாலமுரளிகிருஷ்ணா உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இசைத்துறையில் அளப்பரிய பணி ஆற்றிய டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று விட்டார் என்பது கர்நாட இசை கலைஞர்கள், இசைத்துறையிருனர், திரைப்படத் துறையினர் உள்பட எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.

அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Loading...

vaitheeswaran