பிரதமரை சந்திக்க பேரணியாகச் சென்ற அதிமுக எம்பிக்கள்

share on:
Classic

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளிப்பதற்காக டெல்லியில் அதிமுக எம்பிக்கள் பேரணியாகச் சென்றனர்.

நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற அவர்கள், பிரதமர் அலுவலகத்தில் தங்கள் மனுவை அளித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் இன்று பிரதமரை சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, பிரதமர் அலுவலகத்தில் தங்கள் மனுவை அளித்தனர்.

Loading...

vaitheeswaran