பிரபஞ்ச அழகியான மருத்துவ மாணவி

share on:
Classic

2016ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப்போட்டி ஃபிலிபைன்ஸின் மனீலா நகரில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, மொத்தம் 86 அழகிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில், இறுதிச்சுற்றில் நுழைவதற்கான முந்தைய சூற்றுக்கு கென்யா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, பெரு, பனாமா, கொலம்பியா, ஃபிலிபைன்ஸ், கனடா, பிரேசில், ஃபிரான்ஸ், ஹைட்டி, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் தகுதி பெற்றனர்.

இதிலிருந்து இறுதிச்சுற்றுக்கு ஃபிரான்ஸ், கொலம்பியா மற்றும் ஹைட்டி நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முன்னேறினர். இந்த சுற்றின் முடிவில், கொலம்பிய அழகி மூன்றாமிடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிரபஞ்ச அழகி மற்றும் இரண்டாமிடம் பிடித்தவருக்கான அறிவிப்பு வெளியாவதை உலகமே எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது, இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐரிஸ், உலக மயமாக்கலை ஃபிரான்ஸ் பெருமளவில் விரும்புவதாகவும், பல நாட்டு மக்களின் வருகைக்காக ஃபிரான்ஸின் எல்லைகள் எப்போதும் திறந்தே இருக்கும் என கூறினார்.

இந்த பதில் நடுவர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து, 2016ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக ஐரிஸ் அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியானதும், பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தையும் தாண்டி விண்ணைப் பிளந்தது.

இந்த போட்டியில் ஹைட்டி அழகி பெலிஸ்ஸியர் இரண்டாமிடம் பிடித்தார். 24 வயதான ஐரிஸ், ஃபிரான்ஸ் மருத்துவக் கல்லூரியில் பல்மருத்துவம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish