பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன்  காலமானார் 

share on:
Classic

நடிகர் கார்த்திக் நடித்த,மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான  " அமரன் " படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவரது இயற்பெயர் டைடஸ் ( Titus ) , மனைவியின் பெயர் ஷோபியா ( Sofiya ) ,மற்றும் மகள்களான ஷரோன் ( Sharon ) , பிராத்தனா ( Prathana ) உள்ளனர். 

இவர் சிறுநீரக கோளாறு  காரணமாக  ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சைபெற்றுவந்தார், நேற்று மதியம் 11-மணியளவில்  சிகிச்சை பலனின்றி  காலமானார். இவரது உடல் நாளை  ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது. நாளை மதியம் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

"அமரனை" தொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக  கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

News Counter: 
200
Loading...

sankaravadivu