பிரிட்டன் மகாராணியாக 2ம் எலிசபெத் பதவியேற்று 65 ஆண்டுகள் நிறைவு

share on:
Classic

பிரிட்டன் அரசாட்சியில் 65 ஆண்டுகள் மகாராணியாக திகழ்ந்த ஒரே அரச குடும்பத்தவர் என்ற மாபெரும் கௌரவம், இரண்டாம் எலிசபெத்தின் வசம் சென்றுள்ளது.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 1952ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 6ஆம் தேதியன்று பிரிட்டனின் அரசியாக பொறுப்பேற்றார். தற்போது அவர், அரசியாக பொறுப்பேற்று 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு பிரிட்டனில் பல்வேறு பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இதனொரு பகுதியாக, எலிசபெத்தை கௌரவிக்கும் விதமாக மத்திய லண்டனில் 41 குண்டுகள் வெடிக்கச்செய்து அரச மரியாதை செலுத்தப்பட்டது.

65 ஆண்டுகள் நிறைவடைந்ததன் மூலம், சஃபைர் ஜூப்ளி கண்ட முதல் பிரிட்டன் அரச குடும்பத்தவர் என்ற மகத்தான வாழ்நாள் சாதனைக்கு எலிசபெத் சொந்தக்காரர் ஆனார். முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு இவர், பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த அரசி என்ற பெருமையையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya