பிரேசில் சிறையில் கலவரம்: 10 கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பலி

share on:
Classic

பிரேசிலில் உள்ள அல்காகஷ் என்ற சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

பிரேசிலின் வட கிழக்கு நகரான நடாலில் உள்ள அல்காகஸ் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டனர். இதில் 10 கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தனர்.

பிரேசிலில் உள்ள மற்றொரு சிறையையும், சிறைவாசிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது இந்த ஆண்டில் பிரேசிலில் நடக்கும் மூன்றாவது மிகப் பெரிய சிறை கலவரமாகும்.

Loading...

surya