பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 60 பேர் கொலை

share on:
Classic

பிரேசில் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை பொருள் விற்கும் கும்பலை அடைத்து வைக்கும் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் நேற்று சிறைக் கைதிகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியது.

இதில் கைதிகள் ஒருவருக்கொருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டதில் 60 கைதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மோதலில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Loading...

surya