close
முகப்பு பிறந்து 10-நாட்களே ஆன குட்டியானை உயிரிழப்பு 

பிறந்து 10-நாட்களே ஆன குட்டியானை உயிரிழப்பு 

January 10, 2018 159Views
 பிறந்து 10-நாட்களே ஆன குட்டியானை உயிரிழப்பு 

ஒசூர் அருகே பிறந்து 10-நாட்களே ஆன குட்டியானை ஏரியில் விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒசூர் சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு சுற்றிவந்தது. இந்த காட்டுயானைகள் கூட்டத்தில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானைகள் இருந்தன. வனத்துறையினர் இந்த காட்டுயானைகளை சானமாவு வனப்பகுதியிலிருந்து 4-முறை தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். 

குட்டிகள் உடன் இருந்ததால் யானைகள் போக மறுத்து வந்தன.இந்த நிலையில் நேற்று சானமாவு வனப்பகுதியிலிருந்த காட்டுயானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். 

அப்போது இரவு நேரத்தில் அனுமந்தபுரம் கிராமம் அருகேயுள்ள சேஷையா ஏரியில் பிறந்து 10 நாட்களே ஆன குட்டியானை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.