புதிய ரூபாய் தாள்களை முழுவதும் புழக்கத்தில் விட வேண்டும் - ராமதாஸ்

share on:
Classic

மக்களின் துயரங்களை போக்க நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய ரூபாய் தாள்களை முழுவதும் புழக்கத்தில் விட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " புழக்கத்தில் இருந்த பணம் முழுவதும் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில், அதற்கு மாற்றாக புதிய பணம் வழங்கப்படாததால் பணப்புழக்கம் குறைந்து வணிகம் முடங்கியுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கி 10 நாட்களாகி விட்ட நிலையில் புதிய ரூ.500 தாள்கள் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. இவ்வாறாக மத்திய அரசின் அரைகுறை செயல்பாடுகள் தான் வணிகத்தையும், மக்களையும் முடக்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

vaitheeswaran