புதுச்சேரி : நாராயணசாமிக்கு பதவிப்பிரமாணம்

share on:
Classic

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமிக்கு சட்டமன்ற உறுப்பினராக சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருக்கு காலை 11.12 மணிக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜஹான், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், அரசுக் கொறடா அனந்தராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி, ஜெயமூர்த்தி, உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, கீதா ஆனந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர், கொறடா, மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர், உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை தேசிய அரசியலில் வகித்த நாராயணசாமி முதன்முறையாக புதுச்சேரி சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran