புதுச்சேரி : 23ம் ஆண்டு சர்வதேச யோகா போட்டி

share on:
Classic

புதுச்சேரியில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு சர்வதேச யோகா போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச யோகா போட்டிகள் புதுச்சேரி கடற்கரைப் பகுதி காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த யோகா போட்டிகளைக் காண இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ், ஹாங்காங், மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இதில், பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு வகையான யோகாசனங்கள் மூலம் தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்.

உடலை வில்லாக வளைத்தல், ஒருவர் மீது ஒருவர் நின்றபடி யோகாசனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Loading...

vaitheeswaran