புளோரிடா: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

share on:
Classic

புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் துவங்கினான். இதனால், பதற்றமடைந்த பயணிகள் ஓடத் துவங்கினர்.

தகவல் அறிந்து வந்த அதிரடிப்படையினர் விமான நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

Loading...

jagadish